சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும் – துரைமுருகன்

திமுக மூத்த தலைவர் துரைமுருகன் சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவில் யாரும் வெளியே வராத போது மக்கள் எவ்வளவு அச்சத்தில் உள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது என்று குறிப்பிட்டார். மேலும் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மோடியின் அறிவுறுத்தலின்படி ஊடரங்கு பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று காலை 7 முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில், தற்போது நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழா அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்களின் நலன் கருதி இந்த முடுவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்