பலாத்காரம் செய்த துணை நடிகர் காணவில்லை என நடிகை புகார்..!

"கஹானி கர் கர் கி" ,  "மெய்ன் நிக்லா ஹோகா சந்த்" மற்றும் "நாச் பாலியே" போன்ற ஹிந்தி

By murugan | Published: Nov 17, 2019 07:24 AM

"கஹானி கர் கர் கி" ,  "மெய்ன் நிக்லா ஹோகா சந்த்" மற்றும் "நாச் பாலியே" போன்ற ஹிந்தி தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் நடித்த  நடிகை ஒருவர் துணை நடிகர் தன்னை ஒரு ஹோட்டல் அறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தற்போது   கர்ப்பமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அந்த நடிகை கூறுகையில் ,இந்த ஆண்டு அக்டோபரில் இருந்து  துணை நடிகருடன் நண்பராக பழகி வந்தேன். மும்பையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் இருந்த போது துணை நடிகர் எனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என கூறியுள்ளார். பின்னர் நான் கர்ப்பமாக இருப்பதை அவரிடம் கூறி ​​ திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன் அவர் அதற்க்கு மறுத்துவிட்டார்.இதைத்தொடர்ந்து நான்  யமுனநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். உடனே அவர் காணாமல் போய்விட்டார். துணை நடிகரின் குடும்பத்தினர் அவருக்கு ஆதரவாக உள்ளனர். நடந்த அனைத்தையும் அவரது குடும்பத்தினர் தெரியும் ஆனால் எனக்கு உதவ மறுக்கிறார்கள் என  கூறினார். அந்த துணை நடிகரை  போலீசார் தேடி வருகின்றனர்.    
Step2: Place in ads Display sections

unicc