சூர்யாவுடன் அந்த படத்தில் நடித்தது தான் நான் செய்ய மிக பெரிய தவறு ! புலம்பும் நடிகை !

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள  டாப் ஹீரோ.இவர் நடிப்பில் ஆரம்பத்தில் சில  படங்கள் தோல்வியை சந்தித்தன.அந்த வகையில் இவருடைய சினிமா கேரியரில் தோல்வியை சந்தித்த படம் “ஸ்ரீ”.

அந்த படத்தில்  நடிகை ஸ்ருதிகா மற்றும் காயத்ரி ஜெயராமன் நடித்துள்ளார்கள்.இந்நிலையில் இந்த படத்தில் நடித்த காயத்ரி ஜெயராமன் தற்போது அளித்த பேட்டியில், நான் செய்த மிக பெரிய தவறு  ஸ்ரீ படத்தில் நடித்தது தான் என்று கூறியுள்ளார்.இந்த படத்தில் இயக்குநர் என்னிடம் சொன்ன கதை வேறு ஆனால் எடுத்த விதம் வேறு என்று கூறியுள்ளார்.மேலும் அவர் நான் இந்த படத்தில்  ஒரு சில காட்சிகளில் மட்டும் தான் வருவேன் என்றும் கூறியுள்ளார்.

இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் பைரவி கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Comment