நன்றி மறந்தவன் தமிழன், கொண்டாடத் தெரியாதவன் தமிழன்-பொன். ராதாகிருஷ்ணன்

நன்றி மறந்தவன் தமிழன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அமித் ஷாவின் இந்த கருத்துக்கு எதிராக சமூக வலை தளமான ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து  ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியது.இந்திய அளவில்  #StopHindiImposition ,#StopHindiImperialism,#தமிழ்வாழ்க  ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி யது.

இந்த நிலையில் ராமசாமி படையாட்சியார் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நன்றி மறந்தவன் தமிழன், கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என்று கூறினார். சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை என்று குற்றம்சாட்டினார்.