தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: தினகரன் அவசர ஆலோசனை

அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார்.டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்றும்  என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்றும் பேசினார்.
இந்நிலையில்  தேனி மாவட்ட  அமமுக நிர்வாகிகளுடன்  சென்னை அடையாறில் உள்ள  தனது இல்லத்தில் வைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தினகரனை விமர்சித்து தங்க தமிழ்செல்வன் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில் தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.