தமிழக சுகாதாரத்துறையிடம் ஐகோர்ட் கிளை கேள்வி..!!!

தமிழகமெங்கும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நாளுக்குநாள்

By Fahad | Published: Apr 06 2020 02:06 AM

தமிழகமெங்கும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நாளுக்குநாள் இந்த காய்ச்சலால் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது ஐகோர்ட் கிளை. மேலும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று நவ.20ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலரிடம் கூறப்பட்டுள்ளது.