மலையாள சினிமா சாயலில் கார்த்தி – ஜோதிகா நடித்துள்ள தம்பி படத்தின் மிரட்டலான டீசர் இதோ…!

மலையாள சினிமா சாயலில் கார்த்தி – ஜோதிகா நடித்துள்ள தம்பி படத்தின் மிரட்டலான டீசர் இதோ…!

தீரன், கடைக்குட்டி சிங்கம், கைதி என நிதானமாக தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறார் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர் மலையாள சினி உலகில் முக்கிய இயக்குனராவர்.
இப்படத்தில் ஜோதிகா கார்த்திக்கு அக்காவாக நடித்துள்ளார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து டிசம்பரில் படம் ரிலீசாக உள்ளது.
இப்படத்தின் டீசர் தற்போது ரிலீசானது. இதில் பல அடிதடி குற்றங்களில் ஈடுபடும் தம்பி கார்த்தி, தம்பியை தேடும் அக்கா ஜோதிகா என காட்சிப்படுத்தப்பட்டாலும் மலையாள சினிமா சாயலில் படம் உருவாகியுள்ளது என டீசரில் தெரிகிறது. படம் ரிலீசான பிறகுதான் தமிழ் ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்குமா என பார்க்கலாம்.  இப்படம் மலையாளத்திலும் ரிலீசாக உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube