பழைய தோல்வி பட தயாரிப்பாளருக்கு வாய்ப்பை கொடுத்த தளபதி.! தளபதி-66 தயாரிப்பாளர் இவர்தானாம்.!

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுறா பட தயாரிப்பாளருக்கும் தளபதி 66 யை தயாரிக்கும் வாய்ப்பை விஜய் அவர்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இவரது தளபதி 65 படமானது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி 2 என்று கூறப்படுகிறது அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் தகவல்கள் வெளியாகியிருந்தது.
தளபதி – 65ஐ தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் அவர்கள் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளரான முரளிக்கும், தளபதிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சுறா படத்தின் தயாரிப்பாளரான சங்கிலி முருகனுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தளபதி விஜய்யின் அடுத்தடுத்த படங்களை தனது தோல்வியடைந்த பழைய படங்களின் தயாரிப்பாளர்களை வைத்து தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.