ரூ.5,00,000 செலவில் 10 பள்ளிகளில் நலப்பணிகளை மேற்கொள்ளும் தளபதி ரசிகர்கள் ..!

சமீபத்தில் தளபதி விஜயின் “பிகில்” திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் ,வரவேற்பு ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.இதனை தொடர்ந்து மாநகரம், கைதி திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் “தளபதி 64” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது படக்குழு டெல்லியில் உள்ள ஒரு  கல்லூரியில் படப்பிடிப்பை  நடத்தி வருகிறது.
பிகில் இசை வெளியிட்டு விழாவின் போது எனது திரைப்படத்திற்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என விஜய் அவரது ரசிகர்களுக்கு வேண்டுக்கொள் விடுத்து இருந்தார்.இதனை தொடர்ந்து  ரசிகர்கள் திரைப்படம் வெளியானபோது பேனருக்கு பதிலாக ரசிகர்கள் திரைப்படத்திற்கு வந்த பொது மக்களுக்கு விதைபந்துகள் கொடுத்தனர்.
Image
நெல்லையில் உள்ள விஜய் ரசிகர்கள் பெண்கள் பள்ளியில் சிசிடிவி கேமராவை வழங்கினார்கள். இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் இளைஞர் அணி தலைமை தளபதி மக்கள் இயக்கத்தின் மூலம்  காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில்  மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக பத்து பள்ளிகள் மேம்படுத்தும் பணியை  தொடங்க உள்ளனர்.
இந்த மேம்படுத்தும் பணியில் கழிவறை சீரமைப்பு, சிசிடிவி கேமரா பொருத்துதல் , நூலகம் அமைத்தல், சுவர் ஓவியம் வரைதல், கணினி வழங்குதல், தண்ணீர் வசதி  போன்ற பல பணிகளை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இளைஞர் அணி 5,00,000 மதிப்பில் இந்த பணிகளை செய்ய உள்ளனர். இப்பணி வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்