உன் கூட நடிச்சதவிட உன் டூப் கூட நடிச்சதுதான் அதிகம்! யோகிபாபுவை பங்கமாய் கலாய்த்த பிகில் விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம்

By manikandan | Published: Sep 20, 2019 02:31 PM

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் யோகிபாபு, ' தளபதி விஜய்யை பற்றியும் படக்குழுவினர் பற்றியும் பெருமையாக பேசினார். பட ஷூட்டிங்கின் போது உன்கூட நடிச்சதை விட உன் டூப் கூடத்தான் அதிகமாக நடித்து இருக்கிறேன் என கூறுவாராம். இதற்கு காரணம் விஜயின் கால்பந்தாட்ட அணியில் யோகிபாபுவும் இருப்பாராம் கால்பந்து விளையாடும் கட்சியில் யோகிபாபுவுக்கு பதிலாக டூப் தான் விஜயுடன் நடிப்பாராம். கால்பந்தாட்ட காட்சி  ஒரிஜினலாக இருக்கவேண்டி, அட்லீ யோகிபாபுவுக்கு பதிலாக டூப் வைத்து படமாக்கினாராம். அதனால் தான் விஜய் யோகிபாபுவை பார்த்து இப்படி கூறியுள்ளார். என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Step2: Place in ads Display sections

unicc