அனல் பறக்கும் தளபதி 65 மாஸ் அப்டேட்! அசுரன் இயக்குனர்! தீபாவளி 2020!

  • தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். 
  • தளபதி விஜய் தனது 65வது படத்திற்காக இயக்குனர் மகிழ் திருமேனி உடன் இணைவார் என கூறப்பட்டது. 
  • தற்போது இயக்குனர் வெற்றிமாறனிடம் விஜய் கதை கேட்டு ஓகே செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் தற்போது கர்நாடகாவில் ஜெயில் செட் போட்டு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் என தகவல்கள் பரவின. ஆனால், மகிழ் திருமேனி உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்தை இயக்குவாராம்.

ஆனால், தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தை உடனே முடித்துவிட்டு அடுத்த படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.

இந்த படத்திற்காக அசுரன் இயக்குனர் வெற்றிமாறனிடம் கதை கேட்டுள்ளாராம். வெற்றிமாறனும் ஒரு கதை கூறியுள்ளாராம். தளபதி தற்போது உள்ள புதிய படத்தை முடித்துவிட்டு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படம் தீபாவளிக்கு வெளியிட விஜய் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.