தளபதி விஜய் – மக்கள் செல்வன் – அனிருத் என பிரபலங்கள்மத்தியில் கோலாகலமாக ஆரம்பித்த 'தளபதி 64' பட பூஜை!

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய், மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக உள்ளார்.
இந்த படத்தில் மாளவிகா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, ஆண்டனி வார்கேஸ், சந்தனு என பலர் நடிக்க உள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு ஷட்டிங் தொடங்கப்பட்டது. அதில், தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அனிருத், மாளவிகா மோகன், சந்தனு, இயக்குனர் லோகேஷ்கனகராஜ், தயாரிப்பளர் என படக்குழுவினர் கலந்துகொண்டனர் .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.