தமிழக காவல்துறைக்கு விஷேச பயிற்சி அளித்த தல அஜித்!

தமிழக காவல்துறைக்கு விஷேச பயிற்சி அளித்த தல அஜித்!

  • தல அஜித் குமார் நடிப்பதில் மட்டுமல்லாமல் மற்ற குறிப்பிட்ட சில துறைகளிலும் தனது திறமையை வளர்த்து வருகிறார். 
  • இவர் அண்மையில் காஞ்சிபுரம் காவல்துறையினர் சிலருக்கு ட்ரோன் ரக சிறிய விமானத்தை இயக்க பயிற்சியளித்து வந்துள்ளார். 

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல், கார் – பைக் ரேஸிங் ஓட்டுவது, சமையல் செய்வது, புகைப்படம் எடுப்பது, துப்பாக்கி சுடுவது, ஹெலிகாப்டர் இயக்குவது என பல துறைகளில் தனது திறமையை காட்டி வருகிறார்.

இவர் ஏற்கனவே சென்னை ஐஐடியில் ஒரு மாணவர் குழுவிற்கு ஆலோசனை வழங்கினார். அந்த  குழு ஆஸ்திரேலியாவில் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ட்ரோன் ரக சிறிய விமான சிறப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் அண்மையில் காஞ்சிபுரம் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு ட்ரோன் ரக சிறிய விமானத்தை எப்படி இயக்குவது என ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் அப்போது க்ளீன் சேவ் செய்து வலிமை படத்திற்கான லுக்கில் இருந்துள்ளார். ஆலோசனை வகுப்பு முடித்து புகைப்படம் எடுக்கையில் அஜித் அணிந்திருந்த தொப்பியை கழற்ற போலீசார் கூறியுள்ளாராம். ஆனால், அஜித் தனது லுக் வெளிவந்துவிடும் அதனால் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube