துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ளும் தல அஜித்!

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படம், ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளில் ஈடுபட்டு வருகிறார்.  இதனையடுத்து, அகில இந்திய அளவிலான, துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்து கொள்ளும், தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.