தல 60 சூப்பர் அப்டேட்! தல அஜித்திற்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகை இவர்தானா?

தல 60 சூப்பர் அப்டேட்! தல அஜித்திற்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகை இவர்தானா?

  • ajith |
  • Edited by Mani |
  • 2019-12-14 07:15:50
  • தல அஜித் நடிப்பில் அவரது 60வது படமாக உருவாக உள்ள திரைப்படம் வலிமை. 
  • இந்த படத்தில் ஹீரோயினாக யாமி கவுதம் அல்லது இலியானா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
தல அஜித் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை H.வினோத் இயக்க உள்ளார். போனிகபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் போலீசாக நடிக்க உள்ளார் தகவல் வெளியானது. அடுத்த வருட தீபாவளிக்கு இப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஹீரோயினாக யார் நடிக்கிறார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாக வில்லை. இந்த படத்தில் ஹீரோயினுக்கும் போலீஸ் கதாபாத்திரம் தான் என கூறப்பட்டது. இப்படத்தில் நடிக்க வைக்க நயன்தாரா, ராகுல்ப்ரீத் சிங் என பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. தற்போது ஹீரோயின் லிஸ்டில் இலியானாவும், யாமி கௌதமும் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூரவ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.