தெலுங்கு திரையுலகில் தடம் பதிக்கும் தடம் திரைப்படம்….!!!

  • நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • நடிகர் அருண்விஜய் நடித்துள்ள தடம் படம் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்படவுள்ளது.

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான செக்க சிவந்த வானம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், நடிகர் அருண்விஜய் நடித்துள்ள படம் தடம். இப்படம், தெலுங்கில் ரீ-மேக் செய்யப்படவுள்ளது. அருண் விஜய் கதாப்பாத்திரத்தில் ராம் பொத்தனேனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், இப்படத்தை, சரவண் ரித்விக் கிஷோர் தயாரிக்கவுள்ளார். பூரி ஜகன்நாத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் கதாநாயகியாக தன்யா ஹோப் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.