வாடிக்கையாளரை அவமானப்படுத்தியதால் ஜவுளி கடைக்கு ரூ.20,000 அபராதம்..! நீதிமன்றம் உத்தரவு ..!

  • நெல்லையப்பன் என்பவர்  வாங்கிய துணியின் அளவு சிறிதாக இருந்தாக கூறி வேறு துணி தர கேட்க, ஆனால்  கடையின் உரிமையாளர் துணியும் தர முடியாது, பணத்தையும் கொடுக்க முடியாது என கூறி அவமானப்படுத்தி உள்ளார்.
  • இதனால் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரமும் , வழக்கு செலவு 5000 என மொத்தம் 20 ஆயிரம் நஷ்டஈடு கொடுக்க உத்தரவிட்டனர்.

திருநெல்வேலி டவுன் மேட்டுத்தெருவை சார்ந்தவர் நெல்லையப்பன் இவரது மனைவி கோமதி இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த அக்டோபர் 16-ம் தேதி தீபாவளிக்காக தனது மகளுக்கு துணி எடுக்க டவுன் வடக்கு ரத வீதியில் ஒரு துணிக்கடைக்கு சென்றுள்ளனர்.

அங்கு அது தனது 11வயது  மகளுக்கு ரூ.1000-க்கும்  7 வயது மகளுக்கு ரூ. 700-க்கு  சுடிதார் வாங்கியுள்ளார். அந்த கடையில் உடை மாற்றி பார்க்கும் வசதி இல்லாததால் உடையை சரியாக இருக்குமென சொன்னதால் பணத்தை கொடுத்து நெல்லையப்பன் துணியை வாங்கி வந்துள்ளார்.

ஆனால் பெரிய மகளுக்கு வாங்கிய டாப் சுடிதார் சரியாக இருந்தாலும் பேண்ட் சிறிதாக இருந்துள்ளது. இதனால் துணியை பிரித்து தைக்கலாம் என எண்ணினர். ஆனால் அதற்கு துணியில் இடமில்லை புது துணி இல்லாமல் தீபாவளி கொண்டாட முடியாது என மகள் கூறியுள்ளார்.இதை தொடர்ந்து அக்டோபர் 19-ம் தேதி ஜவுளிக் கடைக்குச் சென்று வேறு துணி  தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அந்தக் கடையின் உரிமையாளர் துணியும் தர முடியாது, பணத்தையும் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். உடனே நெல்லையப்பன் துணியை என்ன செய்வது என கேட்க முடிந்தால் பயன்படுத்து  இல்லையென்றால் மாவட்ட ஆட்சியரை வைத்துள்ள அன்பு சுவருக்கு தானமாக கொடு என பலர் முன்னிலையில் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த நெல்லையப்பன் தனக்கு நடந்து நிலையை திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் கோமதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத்தில் தலைவர் தேவதாஸ் , சம்பந்தப்பட்ட ஜவுளி நிறுவனம் செய்தது நேர்மையற்ற வியாபாரம் எனவே மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரமும் , வழக்கு செலவு 5000 என மொத்தம் 20 ஆயிரம் நஷ்டஈடு கொடுக்க உத்தரவிட்டனர்.

author avatar
murugan