டெஸ்ட் போட்டி.!165 ரன்னில் அனைத்து விக்கெட்டை இழந்த இந்திய அணி.!

  • இந்திய அணி 68.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது.

By Fahad | Published: Apr 05 2020 11:27 AM

  • இந்திய அணி 68.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது.
  • நியூசிலாந்து அணி 26 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 72 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
இந்தியா , நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையெடுத்து நேற்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே டிம் சவுதியின் பவுலிங்கில் பிருத்வி ஷா 16 ரன்னில் போல்டு ஆனார்.பின்னர் புஜாரா இறங்கினார். இறங்கிய சில நிமிடங்களில் விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம்  11 ரன்னில் கேட்ச் ஆனார். நிதானமாக விளையாடி வந்த மாயங்க் அகர்வால் 34 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் கேப்டன் கோலி வந்த வேகத்தில் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார்.இதையெடுத்து ரிஷாப் பந்த் , ரஹானே இருவரும் விளையாடி கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. களத்தில் ரிஷாப் பந்த் (10) , ரஹானே(38) ரன்களுடன் இருந்தனர்.இந்திய அணி 55 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்து இருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவதுநாள் ஆட்டம்  தொடங்கியது.  ரிஷாப் பண்ட் 19 ரன்களும், பின்னர் இறங்கிய அஸ்வின் ரன் எடுக்காமலும் வெளியேறினார்.சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய  ரஹானே அரைசதம் அடிக்காமல் 46 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.அடுத்துஇறங்கிய இஷாந்த் சர்மா 5 , முகமது சமி 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக  இந்திய அணி 68.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் கைல் ஜாமிசன் , டிம் சவுதி ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும் , ட்ரெண்ட் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லாதம், டாம் ப்ளண்டெல் ஆகியோர் இறங்கினர். டாம் லாதம் 11 ரன்னில் ரிஷாப் பந்த்திடம் கேட்சை கொடுத்தார். தற்போது களத்தில் கேப்டன் கேன் வில்லியம்சன்(31) டாம் ப்ளண்டெல் (30) ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.நியூசிலாந்து அணி 26 ஓவர் முடிவில் 72 ரன்கள் எடுத்து உள்ளனர்.