தகாத உறவால் 5 வயது மகனை கொன்ற கொடூர தாய்.!

  •  ராஜ்குமார், ஆனந்த ஜோதி இருவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது.

By Fahad | Published: Apr 06 2020 10:24 PM

  •  ராஜ்குமார், ஆனந்த ஜோதி இருவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது.
  • ராஜ்குமார் உறவுக்காரரான மருதுபாண்டி என்பவருக்கும், ஆனந்த ஜோதிக்கும்  தொடர்பு இருந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருந்ததை ஆனந்தஜோதி மகன் ஜீவா பார்த்ததால் கொலை செய்து உள்ளனர்.
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி  அருகே உள்ள வீ.குச்சம்பட்டி பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி ஆனந்த ஜோதி இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஜீவா(5) என்ற மகனும் , லாவண்யா(3) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்களின் மகன் ஜீவா பள்ளி சென்று விட்டு வீட்டில் வந்து படுத்து தூங்கி உள்ளார். பின்னர் ஜீவா மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஜீவாவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். மேலும் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கிய  தடமும் , நகங்கள்  இருந்ததாகவும்  மருத்துவர் தெரிவித்தனர். இதுகுறித்து ராஜ்குமார் ,  மனைவி ஆனந்த ஜோதிடம் கேட்டு உள்ளார்.ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என ஆனந்த ஜோதி கூறியுள்ளார். மனைவியின் மீது சந்தேகம் அடைந்த ராஜ்குமார் மகன் சாவு குறித்து சந்தேகம் உள்ளதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் ஆனந்த ஜோதி அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் ஆனந்த ஜோதிக்கும் , ராஜ்குமார் உறவுக்காரரான மருதுபாண்டி என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. கடந்த சில  நாட்களுக்கு முன் இருவரும் நெருக்கமாக இருந்ததை ஆனந்த ஜோதி மகன் ஜீவா பார்த்துள்ளான். இதனால் தங்கள் தொடர்பு ராஜ்குமாருக்கு தெரிந்து விடுமோ என நினைத்து ஆனந்தஜோதியும் , மருதுபாண்டியும்  ஜீவாவை கொல்ல முடிவு செய்தனர். அதன்படி ஜீவாவை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஆனந்த ஜோதி மற்றும் மருதுபாண்டி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.