10 வயது சிறுவன் கண்டுபிடித்த 66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை!!

சீனாவில் உள்ள குயாங்டான்க்கில் வசித்து வருபவன், சாங் யாங்ஷீ. பத்தே வயது ஆகும்

By Fahad | Published: Apr 06 2020 05:01 AM

சீனாவில் உள்ள குயாங்டான்க்கில் வசித்து வருபவன், சாங் யாங்ஷீ. பத்தே வயது ஆகும் இவன், டைனோசர் பற்றி அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தான். இந்நிலையில், வழக்கம்போல் மாலை நேரத்தில் நதிக்கரையோரம் விளையாண்டு கொண்டிருந்தான். விளையாண்டி முடித்து விட்டு, ஓய்வெடுக்க கல்லின் மீது அமர்ந்துள்ளார். அப்போது அந்த கல், வித்தியாசமாக தெரிந்துள்ளது. உடனே தனது பெற்றோரிடம் அச்சிறுவன் கூறியுள்ளார். உடனே, அவனது பெற்றோர்கள் அந்த கல்லை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளனர். Image result for டைனோசர் முட்டையை கண்டுபிடித்த பத்து வயது சிறுவன்!! அதுகுறித்து ஆராய்ந்து பார்க்கையில், அது டைனோசர் முட்டை என்பதும், இது 66 மில்லியன் ஆண்டுக்கு முந்தைய முட்டை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த முட்டையை வைத்து பல அறிய தகவல்களை கண்டறிய முடியும். என்றும் கூறினார்கள்.

Related Posts