கணக்கு டீச்சரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர்!

இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு

By sulai | Published: Jul 22, 2019 07:17 PM

இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.அதில் ஒரு தனியார் பள்ளியில் கணக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் மனு அளிக்க வந்துள்ளார். அதில் அவர் திருச்சி டவுன்ஹால் ரோட்டில் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருவதாவும் ஒரு தனியார் பள்ளியில் கணக்கு டீச்சராக பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு பெற்றோர் இல்லை. அதனால் அவர் முதலில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார்.அதற்காக ஒரு வாடகைக்கு வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.அந்த இளைஞர் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பின்னர் டவுன்ஹால் ரோட்டில் ஒரு குவார்ட்டஸில் குடி வைத்துள்ளார். ஒரு நாள் எதிர்ச்சியாக வீட்டின் ஜன்னலை பார்த்துள்ளார்.அப்போது அதில் ஒரு கேமரா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.அந்த கேமராவை பற்றி காதலனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் உன்னை நான் முழுசாக படம் பிடித்து விட்டேன்.அதனால் நீ என்னிடம் கல்யாணம் செய்ய சொல்லி கெஞ்ச வேண்டும்.மேலும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவ்வாறு செய்யவில்லை என்றால் எடுத்த வீடியோவை இணையத்தில் விட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.இது குறித்து காவல்நிலையத்தில் அந்த ஆசிரியர் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்த ஆசிரியர் ,இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பச்சத்தில் விசாரணை நடத்துமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இதை பார்த்த ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்த்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc