நடிகை போல இருப்பதாக கூறி +2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்.!

  • அரைகுறை புகைப்படத்தை அனுப்பினால் பாலிவுட் நடிகை போல இருப்பாய் என கூறி

By Fahad | Published: Apr 08 2020 09:36 AM

  • அரைகுறை புகைப்படத்தை அனுப்பினால் பாலிவுட் நடிகை போல இருப்பாய் என கூறி மாணவி புகைப்படங்களை வாங்கி உள்ளார்.
  •  பின்னர்  புகைப்படங்களை வைத்து தனது ஆசைக்கு இணங்க வைத்து உள்ளார். இதனால் மாணவி கர்ப்பமாக உள்ளார்.
மதுரை காளவாசல் பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி 12-ம்  வகுப்பு படித்து வந்தார். படிப்பு சம்பந்தமான  அனுமதிக்கப்பட்ட மடிகணினியில் மாணவி  டுவிட்டர், இன்ஸ்டாகிரம் போன்ற  சமூக வலைதளங்களில் இவர் அதிகமாக மூழ்கி உள்ளார். இந்த மாணவி  வித விதமான ஆடைகள் அணிந்த புகைபடங்களை  தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். அப்போது அல்ஹசன் என்ற கல்லூரி மாணவர் அந்த மாணவியை இன்ஸ்டா கிராமில் பின் தொடர்ந்து உள்ளார்.அல்ஹசன் அந்த மாணவி பதிவிடும்  அனைத்து  புகைப்படங்களை வர்ணித்து மாணவியின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து உள்ளார். நாளடைவில் இவர்கள் பழக்கம் அதிகமானதால் அல்ஹசனின் கமெண்டுகளை தேடும் நிலைக்கு மாணவியை தள்ளப்பட்டு இருவரும் தங்கள் செல்போன்நம்பரை மாற்றிக் கொண்டனர். பின்னர் அல்ஹசன் அரைகுறை புகைப்படத்தை  அனுப்பினால் பாலிவுட் நடிகை போல இருப்பாய் எனகூறியுள்ளார். அதை நம்பி அந்த மாணவியும்  பல கோணங்களில் தனது அரைகுறையாக புகைப்படங்களை அனுப்பி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நேரில் சந்திக்கலாம் என கூறி நாமக்கல்லில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து அல்ஹசன் தங்கி உள்ளார். மாணவியை அமர்ந்து பேசலாம் என தனது அறைக்கு வரவைத்து உள்ளார்.பின்னர் மாணவியிடம் அத்துமீற முயன்றபோது மாணவி அங்கிருந்து தப்பிக்க முயன்று உள்ளார். ஆனால் அல்ஹசன் அறையில் பூட்டிவைத்து உள்ளார்.தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் தனக்கு அனுப்பிய அறைகுறை புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார். பின்னர் அந்த மாணவியை தனது ஆசைக்கு இணங்க வைத்து உள்ளார். இதனை வெளியில் சொன்னால்  புகைப்படங்களை பரப்பிவிடுவேன் என மிரட்டி உள்ளார்.இதையடுத்து அந்த மாணவி விடுதிக்கு சென்று உள்ளார்.இந்நிலையில் மாணவி அடிக்கடி மயக்கம் தலை சுற்றல் வந்து உள்ளது. இதனால் மருத்துவ சோதனை செய்த போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவி அல்ஹசனின் பலாத்கார செய்தது தெரியவந்தது. மாணவியின் வாக்கு மூலத்தின் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அல்ஹசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

Related Posts