2020ல் அடியெடுத்து உதயமாகும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்.. சிறப்பம்சங்களின் சிறப்புகள்.. எதிர்பார்ப்பில் ஸ்மார்ட் போன் பிரியர்கள்…

  •  2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்களை சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டி.சி.எல். வெளியிட்டுள்ளது.
  • இதன் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஸ்மார்ட் போன் பிரியர்கள்.
     அந்த வகையில் இந்நிறுவனம் டி.சி.எல். 10 ப்ரோ, டி.சி.எல். 10 5ஜி, டி.சி.எல். 10எல் என்ற பெயர்களில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இத்துடன் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களையும் டி.சி.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதங்களில் மடிக்கக்கூடிய திறன் கொண்டிருக்கும் என்றும், இந்த புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும்,  இது முற்றிலும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் என்றும்,
Image result for tcs folded smartphone 2020
இந்த சாதனத்தில் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்ட பெசல்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்த  மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை எப்படி மடித்தாலும் நல்ல உறுதித் தன்மை பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் ,சிறப்பம்சங்களை பொருத்தவரை நான்கு பிரைமரி கேமராக்கள், ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் 5ஜி வசதியை இந்த ஸ்மார்ட்போன்  கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்களை பொருத்தவரை இதில் பிரைமரி சென்சார், சூப்பர் வைடு ஆங்கில், மேக்ரோ லென்ஸ், லோ லைட் சென்சார் உள்ளிட்டவை கொண்டுள்ளது. மேலுல் இதில் 5ஜி வசதி வழங்கப்படுவதால் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765 அல்லது ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனின் வருகை ஸ்மார்ட் போன் பிரியர்களை பெரிதும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
author avatar
Kaliraj