அகில உலக சந்தையில் அடுத்த அதிரடி… தனது மடிக்ககூடிய புதிய மாடலை களமிறக்கப்போகும் சாம்சங் நிறுவனம்…

அகில உலக சந்தையில் அடுத்த அதிரடி… தனது மடிக்ககூடிய புதிய மாடலை களமிறக்கப்போகும் சாம்சங் நிறுவனம்…

சர்வதேச அளவில் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனம் தற்போது அதன் 5ஜி கேலக்ஸி எஸ் 20 இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கிழக்காசிய நாடான தென் கொரிய நாட்டின்  நிறுவனமான சாம்சங் நிறுவனம், சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில்  தனது இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்  சர்வதேச சந்தையில் ஆப்பிள் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கையடக்க ஸ்மார்ட் போன், அதிக திறன் கொண்ட நான்கு கேமராக்களையும், சதுரமாக மடிக்கக்கூடிய கண்ணாடி திரைகளையும் கொண்டது. இதன் விலை இந்திய மதிப்பில் 98 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த மாடல்,  வரும் வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேலக்ஸி எஸ் 20 செல்போன்கள் ஊதா, தங்கம் மற்றும் கருப்பு நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளதாக சாம்சங் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதன் வருகை சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube