கூகுள்-பே மூலமாக இனி ஃபாஸ்ட்டேக் ரீசார்ச் செய்யலாம்.. அது எப்படி?

கூகுள்-பே மூலமாக இனி ஃபாஸ்ட்டேக் ரீசார்ச் செய்யலாம்.. அது எப்படி?

சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை “ஃபாஸ்ட் டேக்” எனும் முறையை நடைமுறையில் கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும்.

அதன்பின், நமது வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும். இதற்கு நாம் ரீசார்ச் செய்ய வேண்டும். இதனை நீங்கள் கூகுள்-பே மூலமாகவும் ரீசார்ச் செய்து கொள்ளலாம்.

கூகுள்-பே மூலம் ஃபாஸ்ட்டேக் ரீசார்ச் செய்யும் வழிமுறை:

  • முதலில் உங்கள் மொபைலில் கூகுள்-பே செயலியை ஓபன் செய்யவும்.
  • அதில் பில் பேமென்ட்ஸ் (Bill payments) எனும் பிரிவில் ஃபாஸ்ட்டேக்ஐ தேர்வு செய்யவும்.Image result for google pay fastag payment option
  • அதன்பின் நீங்கள் ஃபாஸ்ட்டேகை வழங்கிய வங்கியை தேர்வு செய்யவும்.
  • அதன்பின் உங்கள் வாகன எண்னை அதில் போடவும்.
  • இறுதியாக, பணம் செலுத்துவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யவும்.
Join our channel google news Youtube