கடும் போட்டியை தொடர்ந்து தனது உற்பத்தியை நிறுத்தியது பிளாக்பெரி நிறுவனம்...

BlackBerry discontinues production following fierce competition

  • ஸ்மார்ட் போன் உலகின் முடிசூடா மன்னனாக இருந்த நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது.
  • ஸ்மார்ட்போன் உலகில் நிலவி வரும் போட்டியை சமாளிக்க முடியாத காரணத்தால் திடீர் முடிவு.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டியாக விளங்கிய நிறுவனம் ப்ளாக்பெரி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம்  ஆண்டுக்கு 500 லட்சம் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்த நிறுவனம் ஆகும், அதிலும்,  ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு போன்றவற்றின் முன்னோடி என்றே கூறும் அளவு மிகவும் பிரபலம் வாய்ந்த ப்ளாக்பெரி நிறுவனம் தற்போது  திடீரென இனி ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தை கைமாற்றுகிறதா என்பது குறித்த அறிவிப்போ அல்லது தகவலோ ஏதும் இல்லை என்றாலும் சந்தையைவிட்டே மொத்தமாக ப்ளாக்பெரி வெளியேறுவது போன்ற அறிவிப்பாகத்தான் இந்த அறிவிப்பு  பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் உலகில் நிலவி வரும் போட்டியை சமாளிக்க முடியாததும் இந்த முடிவிற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எணினும் தொடர்ந்து காலங்களுக்கு அற்ப தன்னை அப்டேட் செய்துகொள்ளாததும் ப்ளாக்பெரி நிறுவனத்துக்கும் ஒரு தடையாக மாறிவிட்டதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. என்றாலும் இந்த பிளாக்பெரி மாடல் சந்தையை விட்டு வெளியேறுவது அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது.