இணையத்தில் கலக்கும் நீல நிற விரியன் பாம்பு… லட்சக்கணக்கில் பார்த்த இணைய வாசிகள்…

பாம்பு என்றால் பகையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்தவகையில் பாம்பு வகைகளில் அரிதானதும், கொடிய விஷம் கொண்டதுமான நீல நிற விரியன் பாம்பு ஒன்றின் கானொளி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த நீல விரியன் பாம்பு பார்பதற்கு பிரகாசமாக இருந்தாலும் கொடிய விஷம் கொண்டது. இதன் விஷம் கடுமையான இரத்தப்போக்கை ஏற்படுத்தும். இந்த  நீல வகை என்பது மிகவும் அரிதானது. கிழக்கு தைமூர் மற்றும் இந்தோனேசியா போன்ற தீவு பகுதிகளில் இவை அதிகமாக  காணப்படுவதாக ரஸ்யாவின் மாஸ்கோ உயிரியல் பூங்கா கூறியுள்ளது. பாலி தீவில் அதிகம் பேர் இந்த பாம்பிடம் கடி படுகிறார்கள். இதனால் அரிதாகவே இறப்பு நிகழும், இந்நிலையில் தான் ஒருவர் ரோஜா செடியின் மீது அமர்ந்திருந்த இந்த நீல விரியன் பாம்பை, செடியோடு கையில் பிடித்து அதை வீடியோ எடுத்துள்ளார். ரெட்டிட் இணையதளத்தில் இதனை சுமார் 22 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

https://twitter.com/planetpng/status/1306620212045844482?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1306620212045844482%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fviral-video-this-blue-snake-is-as-dangerous-as-it-is-beautiful-2297417

author avatar
Kaliraj