ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்....கல்வி பாதிப்படைவதால் மாணவர்கள் வேதனை...!!

ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக

By Fahad | Published: Mar 30 2020 04:41 PM

ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாகை மாவட்ட நாகூர் தேசிய மேல்நிலை பள்ளி மாணவர்கள் தாங்கள் கல்வி கற்பது பாதிக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். பொது தேர்வு வரவுள்ள நிலையில், ஆசிரியர்களின் இந்த போராட்டம் தங்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மாணவர்கள், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

More News From students suffer