இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : பள்ளிக்கல்வித்துறை தீவிர அலோசனை...!!

இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில தினங்களாகவே போராட்டம்  நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்

By Fahad | Published: Mar 30 2020 04:14 PM

இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில தினங்களாகவே போராட்டம்  நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் போராட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தினர் அதில் 16 ஆசிரியர்கள் மயங்கி விழந்தனர். இந்நிலையில் பலமுறை தொடர்ந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தொடந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் மற்றும் செயலாளருடன் தொடக்க கல்வி இயக்குநர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையில் வரும் 7-ம் தேதி ஒருநபர் குழு அறிக்கை தாக்கல் செய்ததும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கடிதம் அளிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனையில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளருடன் தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி ஆகியோருடன் அரை மணி நேரம் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

More News From TEACHERS STRIKE