ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வருகின்ற 21-ஆம் தேதிக்குள் வெளி மாவட்டங்களுக்கு சென்று தங்கியுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துகல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்,தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பொது தேர்வு நடைபெறும் என்று அறிவித்தார்.மேலும் மாணவர்களுக்கு தேவையான பேருந்து வசதியையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவு ஓன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.அந்த உத்தரவில் 10 வகுப்பு தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு வருகின்ற 21-ஆம் தேதிக்குள் வெளி மாவட்டங்களுக்கு சென்று தங்கியுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்கு திரும்பி உள்ளதை தலைமை ஆசியர்கள் உறுதி செய்ய வேண்டும்.திரும்பாத ஆசிரியர்களின்  விவரங்களை 21-ஆம்  தேதி காலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.