மாணவர்களுக்காக வகுப்பறையில் வித்தியாசமான முறையில் பாடம் நடத்திய ஆசிரியை .!

  • வெரோனிகா டியூக் என்ற ஆசிரியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
  • அவர்  உயிரியல் பாடத்தை மாணவர்கள் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள மனித உடல் உறுப்புகள் அச்சிடப்பட்ட உடையை அணிந்து வந்து வகுப்பறையில் பாடம் நடத்தி உள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் வெரோனிகா டியூக் என்ற ஆசிரியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு அறிவியல், ஆங்கிலம், கலை மற்றும் ஸ்பானிஷ் போன்ற படங்களை கற்பித்து வருகிறார்.

மாணவர்களுக்கு இவர் நடத்தும் பாடம் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இவரது நோக்கம்.இந்நிலையில் இவர் சமீபத்தில் நடத்திய உயிரியல் பாடத்தை மாணவர்கள் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள மனித உடல் உறுப்புகள் அச்சிடப்பட்ட உடையை அணிந்து வந்து வகுப்பறையில் பாடம் நடத்தி உள்ளார்.

Image

இது குறித்து அந்த ஆசிரியை கூறும்போது, இந்த இளம் குழந்தைகளுக்கு உள் உறுப்புகளின் தன்மையைக் காண்பது எவ்வளவு கடினம் என்பதை அறிந்த நான், இதை முயற்சித்துப் பார்ப்பது சிறந்து என்று நினைத்தேன் ” என கூறினார்.

 

author avatar
murugan