பள்ளி மாணவனை மலத்தை அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை.!

  • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புதூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த மாணவன், வகுப்பிலேயே மலம் கழித்ததற்காக, பள்ளி ஆசிரியை மாணவனையே, சுத்தம் செய்ய வைத்தார்.
  • தற்போது 2-ம் வகுப்பு படிக்கும் மாணவனை மனிதக்கழிவு அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஒரு சில ஆசிரியர்கள் அவ்வப்போது பள்ளியில் வேலை செய்ய விடுவதும், அல்லது துன்புறுத்துவதும் ஆங்காகே காணப்படுகிறது. சில நேரம் மாணவர்களை அவர்களது வீட்டு வேளைக்கு அழைத்து செல்வது என அடிமையாக்கிக்கொள்வார்கள். அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவன், ஒருவர் வகுப்பிலேயே மலம் கழித்ததற்காக, அந்த பள்ளி ஆசிரியை விஜய லட்சுமி என்பவர் அந்த மாணவனைக் கொண்டு மலம் கழித்ததை தூய்மைப் பணி செய்ய வைத்தார். இதனால் அங்கு புகார் எழுந்தது.

பின்னர், இதுதொடர்பாக அரசு பள்ளி ஆசிரியை விஜய லட்சுமி மேல் புகார் அளித்த நிலையில், பின்பு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஆசிரியை விஜயலட்சுமிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்