நடப்பாண்டுக்கான ஆண்டு திட்ட அட்டவணை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்!

  • நடப்பாண்டுக்கான ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று

By Fahad | Published: Apr 02 2020 10:36 AM

  • நடப்பாண்டுக்கான ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்து உள்ளது.
  • ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு வருகின்ற ஜூன் 27, 28-ம் தேதி நடைபெற உள்ளது.
நடப்பாண்டுக்கான ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்து உள்ளது. அதன்படி இன்று வெளியிட்ட அட்டவணையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு வருகின்ற ஜூன் 27, 28-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் ,பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற மே 02 மற்றும் 03-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம்  தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 97 காலியிடங்கள் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் பணிக்கான தேர்வு வருகின்ற பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 பணியிடங்களுக்கான அறிவிப்பானையும் ,வட்டார கல்வி அலுவலர்கள் பணிக்கான 97 பணியிடங்களுக்கான அறிவிப்பானையும்  கடந்த நவம்பர் 27 -ம் தேதி வெளியிடப்பட்டது.மேலும் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தை அணுகலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.

More News From Annual Plan