ஆய்வில் அதிர்ச்சி தகவல் ! சூடாகத் தேநீர் அருந்தினால் புற்றுநோய்....

சீன ஆராய்ச்சியாளர்கள், மது அருந்தியும் புகை பிடித்தும் இருக்கும் ஒருவர் உடனடியாக

By venu | Published: Feb 07, 2018 12:28 PM

சீன ஆராய்ச்சியாளர்கள், மது அருந்தியும் புகை பிடித்தும் இருக்கும் ஒருவர் உடனடியாக ஒரு குவளை சூடான தேநீர் அருந்துவது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் தாக்கிய நாலரை லட்சம் பேரிடம் ஒன்பதாண்டுகளாக ஓர் ஆய்வை நடத்தியுள்ளனர். Image result for tea அதன் முடிவில் அதிக மது அருந்திவிட்டும் புகை பிடித்துவிட்டும் சூடாகத் தேநீர் அருந்துவது புற்றுநோயால் இறப்பு உண்டாவதை ஐந்து மடங்கு அதிகப்படுத்தும் எனக் கண்டறிந்துள்ளனர். மது அருந்திவிட்டும், புகை பிடித்துவிட்டும் சூடாகத் தேநீர் அருந்துவதால் தொண்டைக்குழி, உணவுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் என்றும், இவ்வகைப் புற்றுநோய் தாக்கியவர்கள் உயிர் பிழைக்கும் விகிதம் குறைவு என்றும் கூறப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc