டெய்லர் அதிரடி ஆட்டம் !வங்கதேசம் அணியை வீழ்த்திய நியூசிலாந்து 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது உலககோப்பை போட்டியில் நியூசிலாந்து  Vs வங்கதேசம் அணி மோதியது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
 வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான இக்பால் 24 மற்றும் சவுமியா 25 ரன்களில் வெளியேறினார்கள்.பின்னர் விளையாடிய வங்க தேச அணியில் சாகிப் சிறப்பாக விளையாடி 64 ரன்களில் வெளியேறினார்.
இதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சரியாக சரியாக விளையாடாமல் ரஹீம் 19, மகமதுல்லா 19,மிதுன் 26,ஹொசைன் 11,ஹாசன் 7,மோர்டசா 1,முகமது 29 ரன்னிலும் வெளியேறினார்கள்.
இறுதியாக வங்கதேச அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஹென்றி 4 விக்கெட்டுகள், போல்ட்  2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 245 ரன்கள் இலக்குடன்  களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க  வீரர்களான கொலின் மன்ரோ 24 ரன்னிலும் ,மார்டின் குப்டில் 25 ரன்னிலும்  வெளியேற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், டெய்லர் கூட்டணியில் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
இறுதியாக நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 248 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

author avatar
murugan