டாடா ஜெஸ்ட் ப்ரிமியோ (Tata Zest Premio) ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்.!

டாடா ஜெஸ்ட் ப்ரிமியோ (Tata Zest Premio) கார் 75hp டீசல் எஞ்சினை பெற்ற மாடலில்

By Dinasuvadu desk | Published: Mar 11, 2018 07:37 PM

டாடா ஜெஸ்ட் ப்ரிமியோ (Tata Zest Premio) கார் 75hp டீசல் எஞ்சினை பெற்ற மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பு எடிசனாக வெளியிடப்பட்டுள்ள கார் விலை ரூ.7.53 லட்சம் என விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு வெளியிப்பட்ட நாள் முதல் இதுவரை 85,000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில் அறிமுகமாகியுள்ள ஜெஸ்ட் பிரிமியோ எடிசன் காரில் கூடுதல் வசதிகளை பெற்றுள்ள நிலையில் எஞ்சினில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட வில்லை. வெளி தோற்ற அமைப்பில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கிளாஸி பிளாக் ரூஃப், பியானோ பிளாக் செய்யப்பட்ட ஓ.ஆர்.வி.எம், மற்றும் உட்புறத்தில் டேன் ஃபினிஷ் மிட் டேஷ்ஃபோர்டு போன்ற அம்சங்கள் தவிர டைட்டேனியம் கிரே மற்றும் பிளாட்டினம் சில்வர் போன்ற இரண்டு புதிய நிறங்களுடனும் பல புதிய அம்சங்களுடன் டாடா ஜெஸ்ட் ப்ரீமியோ கார் விற்பனைக்கு வந்துள்ளது. காரின் பின்புறத்தில் பியானோ பிளாக் நிறத்திலான பூட் லிட் வழங்கப்பட்டு சிறப்பு எடிசனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபியட் நிறுவனத்தின் 1.3லிட்டர் குவாட்ராஜெட் டீசல் இஞ்ஜின் இருவிதமான ஆற்றலில் கிடைக்கின்றது.  73bhp ஆற்றலுடன்  190 Nm டார்க் மாடலில் மட்டுமே கிடைக்க உள்ளது  5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.இது மற்ற வாகனத்தில் இருந்து வேறுபாடாக காட்டுகிறது. மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு. Tata Zest Premio Special Edition introduce.
Step2: Place in ads Display sections

unicc