டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது

டாடாவின் ஏஸ் டிரக்கிற்கு அடுத்ததாக புதிதாக டாடா இன்ட்ரா என்ற டிரக்கை இம்மாதம் 22-ம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது.இந்த  டாடா இன்ட்ரா டிரக் பிஎஸ் 6 என்ஜின் கொண்டது.

இந்த டிரக்கின் பேலோடு 1100 கிலோ கிராம் ஆகும்.டாடா மோட்டார்ஸ் டிரக் மாடல்களில் முதலில்  ஏஸ் டிரக் உள்ளது. ஏஸ் முதல் ஜிப் வரை 0.6 டன் முதல் 1 டன் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

டாடா இன்ட்ரா காம்பேக்ட் சிறப்பு அம்சம்:

இந்த புதிய டாடா இன்ட்ரா டிரக்கில் புதிய பாரத் ஸ்டேஜ் VI (பிஎஸ் -6) தயாராக 1.4 லிட்டர் (DI) டீசல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. 1396 சிசி இயந்திரம் 69 bhp , 4000 rpm பவரையும், மற்றும் 140 nm  1800-3000 rpm டார்க் உருவாக்குகிறது.

5-வேக கியர்பாக்ஸ் கேபிள் ஷிப்ட் மூலம் இணைக்கப்பட்டு உள்ளது .இந்த டிரக் 2512 மிமீ, 1602 மிமீ அகலமும் மற்றும் 463 மிமீ உயரமும் கொண்டுள்ளது.முன்புறத்தில் இன்ட்ரா டிரக்கில் இருப்பதை விட கூடுதலாக ஆப்ஷனல் ஏசி வழங்கப்பட்டுள்ளது

14 அங்குல வீல் கொண்டு இந்த மாடலில் கியர் ஷிஃப்ட் அட்வைசர் உள்ளது.இந்த கியர் அட்வைசர்  எரிபொருள் சிக்கனத்திற்கு உதவுகிறது.இன்ட்ரா டிரக் விலை ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கும்.

author avatar
murugan

Leave a Comment