டார்க் எடிஷனில் வெளிவந்த டாட்டா ஹாரியர்..!

டாட்டா மோட்டார் நிறுவனம், தனது புதிய ஹேரியர் எஸ்யூவீகளை இந்தியாவில் அறிமுகம்

By surya | Published: Nov 08, 2019 01:28 PM

டாட்டா மோட்டார் நிறுவனம், தனது புதிய ஹேரியர் எஸ்யூவீகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் உள்ள கார்கள் அனைத்தும் 12.69 லட்சம் ரூபாயில் இருந்து, 16.25 லட்ச ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையான கார் 2018-19 நிதியாண்டில் அறிமுகமான நான்காவது கார்களாகும். இந்த கார், XE, XM, XT மற்றும் XZ என நான்கு வகைகளில் கிடைக்கிறது. Image result for harrier 3 modes"   1956 cc இன்ஜினை கொண்ட இந்த ஹாரியரில், 2 லிட்டர்-4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனம், இதனை கிரயோடேக் என்று அழைக்கிறது. இந்த இன்ஜின்கள், 138bhp ஆற்றலுடன் பீக் டார்க்யூவில் 350Nm கொண்டதாக இருக்கும். மேலும் இதில் உள்ள 6-ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இதில் எக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. Image result for harrier 3 modes" டாட்டா ஹாரியர் எஸ்யூவியின் இன்டீரியரில், பவர் ஸ்டீயரிங், டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜெஸ்ட் செய்யும் ஸ்டீயரிங், 7இன்ச் டச்-ஸ்க்ரீன் கிளச்சர் மற்றும் பவர் விண்டோஸ் போன்றவை இடம் பெற்றுள்ளது. பாதுகாப்பு வசதிகளாக முன்புறம், டூயல் ஏர்பேக்ஸ் மற்றும் EBD-களுடன் கூடிய ABS பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. Image result for harrier black edition" மேலும், இதில் டாப்-வகையாக விளங்கும் XZ வகை கார்களில், 8.8 இன்ச் ப்ளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் கிளச்சர்களுடன், 9 JBL ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை காரில் டார்க் எடிஷன் வெளிவந்துள்ளது. இதனின் விலை, 16.25 லட்ச ரூபாய் என டாட்டா நிறுவனம் அறிவித்தது.
Step2: Place in ads Display sections

unicc