புத்தாண்டை முன்னிட்டு 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய டாஸ்மாக்.!

  • 2020 புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை ரூ.315 கோடியை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • அதுவும் இந்தாண்டு பீரை விட மதுபானங்கள் தான் அதிகளவு விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் குடிமகன்களின் கூட்டம் எங்கு அலைமோதிகிறதோ இல்லையோ, ஆனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து கிடக்கும். இதனால் அங்கு வழக்கத்தை விட மதுவிற்பனை அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் தமிழகத்தில் 2020 புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை ரூ.315.40 கோடியை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது டிசம்பர் மாதம் 31-ம் தேதி ரூ.181.90 கோடிக்கும், புத்தாண்டு தினத்தன்று ரூ.133.50 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது. அதுவும் இந்தாண்டு பீரை விட மதுபானங்கள் தான் அதிகளவு விற்பனையாகியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது கடந்த ஆண்டை விட 11% சதவீதம் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்