டாஸ்மாக் மதுவிற்பனை – நேற்று ஒரே நாளில் 98.3 கோடி ரூபாய் வசூல்.!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98.3 கோடி ரூபாய் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளை உயர் நீதிமன்றம் விதித்த விதி முறைகளை கடைப் பிடிக்கவில்லை என கூறி டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவை தள்ளுபடி செய்து மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கியது. 

இதனால், கடந்த சனிக்கிழமை மீண்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதுவும், டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 98.3 கோடி ரூபாய் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை 6.8கோடி, திருச்சி 24.4கோடி, மதுரை 23.5கோடி, சேலம் 22.7கோடி, கோவை 20.9 கோடி என மொத்தம் 98.3 கோடி ரூபாய் விற்பனை நடந்துள்ளது. திறக்கப்பட்ட சனிக்கிழமை முதல் நாளே ரூ.163 கோடிக்கும், அடுத்த நாள் ஞாயிற்று கிழமை ரூ.133.1 கோடிக்கும், திங்கள் கிழமை ரூ.109.3 கோடிக்கும், செவ்வாய்க்கிழமை ரூ.91.5 கோடிக்கும் , நேற்று ரூ.98.3 கோடிக்கும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்