வேட்புமனு நிராகரிப்பு! ஆத்திரத்தில் டவர் மீது ஏறி போராட்டம் செய்த நபரால் பரபரப்பு!

  • தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு முதல் கட்ட தேர்தல் முடிந்து நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
  • இதில் தஞ்சை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஆனந்தன் என்பவரது மனு நிராகரிக்கப்பட்டதால் அவர் டவர் மீது ஏறி போராட்டம் செய்தார்.

தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டதேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்காக 10-வது வார்டில் ஆனந்தன் என்பவர் போட்டியிட விரும்பினார். அதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் தஞ்சை பல்கலைகழகத்தில் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன்பிறகு ஆனந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி டவரில் இருந்து கீழே இறங்க வைத்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.