தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மாற்றம் - தமிழக அரசு

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மாற்றம் - தமிழக அரசு

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அமையும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர்.பின்னர் 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கைத்தறி முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குழப்பங்களால் அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

#IPL2020: விக்கெட்டுகளை கொடுக்காமல் வெற்றி பெற்ற மும்பை..!
கேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன்களில் சுருண்ட சென்னை!
திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..!
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் மாயத் தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின் - முதல்வர்.!
#IPL2020: சிஎஸ்கே திணறல்... 3 ரன்னில் 4 விக்கெட்..!
பட்டாசு ஆலை வெடிவிபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!
சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK - சேவாக்..!
வெற்றிபெறுமா சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!
காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்
எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி! வரவேற்பு கிடைக்குமா?