கொளுத்தி போட்ட கோடநாடு விவகாரம்..!!ஆளுநரை சந்தித்த ஆளும்கட்சி ஆதரவாளர்கள்..!!

Governor of the party met with the governor .. !!

தமிழக முதல்வர் மீது நேரடியாகவே குற்றாச்சாட்டுகளை குண்டுகள் போல் பொழிந்த நிலையில் இந்த குற்றசாட்டனாது குற்றம்சாட்டியவர்களே கூறியது தான் பெரும் அதிர்வலைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக மக்களின் கேள்வியாக மாறியுள்ள கோடநாடு கொள்ளை-கொலை இப்பொழுது சந்தேகமாக மாறியுள்ளது.இந்நிலையில் இந்த விவகாரம் முழுக்க காரணம் முதல்வர் தான் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில் குற்றம்சாட்டியவர்களை கைது செய்ய செல்லி விரைந்த தனிப்படை கைது செய்து அதிகாலை சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

தமிழக போலீசாரின் எத்தனை வேகம் ஏன் எஸ்.வி சேகர் விவகாரத்தில் இல்லை என்று திருமுகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட சைமன் மற்றும் மனோஜ் இருவரையும் நீதிபதி விசாரித்த பின்னர் காவல்துறையிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாளிக்க முடியாமல் திணறவே சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்து போலீசாரின் வாதத்தை மறுத்துவிட்டார் எழுப்பூர் நீதிபதி  சரிதா.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக எதிர்கட்சித்தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவை அளித்தார்.இந்நிலையில் இன்று ஆளுங்கட்சியின் ஆதாரவாளர்களான அக்கட்சியின் கே.பி முனுசாமி தலைமையில் ஆளுநரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிகிறது.

இந்த சந்திப்புக்கு பிற்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டது எல்லாம்  முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடன் கூறிய ஒரு குற்றச்சாட்டுகள் மேலும் முதல்வர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வந்து மு.க.ஸ்டாலின் மனு கொடுத்துள்ளது. முதல்வரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க கூடியாகும்

கோடநாடு விவகாரத்தில் நாங்கள் எங்கள் தரப்பில் உள்ளதை ஆளுநரை சந்தித்து விளக்கங்களை அளித்துவிட்டோம்.இந்த கோடநாடு வீடியோவின் பின்னணியில் உள்ள அரசியல் சதியையும் ஆளுநரிடம் விளக்கி கூறியுள்ளோம்

இந்த விவகாரத்தில் தொடர்புடைய கொலைகாரர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாயத்திற்காக கூறிய கருத்தை எல்லாம் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்து கொண்டு கூறுகிறார்.ஆளுநரிடம் நாங்களாகவே வந்து உண்மை நிலையை எடுத்துச் சொல்லி உள்ளோம்.எங்களை அவர் அழைக்கவில்லை நாங்கள் கொடுத்துள்ள மனுவை படித்துப் பார்த்துவிட்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மகிழ்ச்சியோடு ஆளுநர் உறுதியளித்தார்.

மேலும் கோடநாடு என்பது தனியார் சொத்து அதில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது முதல்வருக்கு எப்படி தெரியும்? அதை பற்றி சசிகலாவிற்கு தான் தெரியும்.உண்மை இல்லாத ஒன்றை பேசும் ஸ்டானுக்கு இதற்கான தண்டனை 7 வருடம் எனபது தெரியும்.இதுமட்டுமல்லாமல்  ரூ.2000 கோடி பற்றி முதல்வர் எதுவும் பேசவில்லை என்று சொல்வது தான் தோன்றித்தனமான கருத்து என்று தெரிவித்தார்.

Related News