உண்மை காதலுக்கும் நாடக காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை இப்படம் காட்டியுள்ளது.! பாஜக தேசிய செயலாளர் கருத்து.!

  • திரௌபதி திரைப்படத்தை பார்த்த அர்ஜுன் சம்பத், எந்த ஒரு சமுதாயத்தையும் புண்படுத்தும் வகையில் இப்படம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் தியேட்டரில் திரௌபதி திரைப்படம் சிறப்பு காட்சி நேற்று போடப்பட்டது. அப்போது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் படத்தை பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, எந்த ஒரு சாதியையும் அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் காண்பிக்கவில்லை எனவும், உண்மை காதலுக்கும் நாடக காதலுக்கும் உள்ள வித்தியாசங்களை இப்படம் காட்டியுள்ளது என குறிப்பிட்டார்.

இதையடுத்து பேசிய அர்ஜுன் சம்பத், அனைத்து தரப்பு மக்களும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கவேண்டும் என்றும், இப்படத்தில் எந்த ஒரு சமுதாயத்தையும் புண்படுத்தும் வகையில் இப்படம் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சமூக விழிப்புணர்வு இப்படத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் எனவும் இந்த படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்