தமிழக முதல்வர் தலைமையில் மெகா ஹிட் படத்தின் வெற்றி கொண்டாட்டம்! எங்கே? எப்போது?

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கன் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக இந்த

By manikandan | Published: Nov 20, 2019 03:48 PM

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கன் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக இந்த வருடம் எல்.கே.ஜி, கோமாளி, பப்பி என மூன்று படங்கள் வெளியாகின. இதில் மூன்று படமும் ஹிட்டாகின. அதிலும் கோமாளி படம் மெகா ஹிட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து அப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். பிரபு என்பவர் இயக்கி இருந்தார். அரசியல் படமாக உருவான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து வெளியான கோமாளி படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து இருந்தார். பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் காமெடி, காதல் என அனைவரும் ரசிக்கும் படி அமைந்ததால் படம் மெகா ஹிட்டானது. இதனை அடுத்து வருண் -யோகி பாபு நடிப்பில் வெளியான பப்பி  திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த மூன்று படங்களின் வெற்றிவிழா சென்னை YMCA மைதானத்தில் வைத்து நவம்பர் 24ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து மேற்கண்ட திரைப்பட கலைஞர்களை கௌரவிக்க உள்ளார். என வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc