மத்திய, மாநில அரசுகளின் துரோகச்செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது-மு.க.ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளின் துரோகச்செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது-மு.க.ஸ்டாலின்

நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் துரோகச்செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது  என்று மு.க.ஸ்டாலின் தெரிவிதித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,  நீட் தேர்வில் விலக்கு கோரும் இரு மசோதாக்களையும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்துச்சென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும். நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் துரோகச்செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது. கடிதம் எழுதுகிறோம் என்ற நாடகத்தை இனியும் தொடராமல் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.