புதிய பாடத்திட்டம் தயாரிக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு

தமிழகத்தில் உள்ள மாநில அரசின் சார்பாக பள்ளிக்கல்வி திட்டத்தில் புதிய பாடத்திட்டம் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த பணிக்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.மேலும் வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்டது.

புதிய பாடத்திட்டத்திற்கான சி.டி.யை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 21-ந்தேதி இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 1, 6, 9, மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய திட்டப்படியான பாடப்புத்தகங்களும், மற்ற வகுப்புகளுக்கு பழைய திட்டப்படியான புத்தகங்களும் அச்சிடும் பணி தொடங்கி உள்ளது. இதில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்கள் 7 மொழிகளிலும், 10 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் அச்சடிக்கப்படுகின்றன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment