தமிழக எம்.பி-க்கள் ஒன்றுபட்டு, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிக்க வேண்டும் -தினகரன்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டி கடந்த 2017 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் மசோதா நிராகரிக்கப்பட்டிருப்பது சட்டப்பேரவைக்கும், தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது . நீட் தேர்வை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்து, சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக எம்.பி-க்கள் ஒன்றுபட்டு, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிக்க வேண்டும் என்று தினகரன் தெரிவித்தார்.