தமிழகம் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம்  கூறுகையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று கடலூர் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.நாளை பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் குறிப்பாக நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடல் மற்றும் மாலை தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.