2-வது நாளாக தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம்

By Fahad | Published: Mar 29 2020 02:45 AM

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. 2ம் நாளாக பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.